Monday, April 17, 2006

நிலவுச் சுடர் 2006 - உங்கள் படைப்புத் திறனுக்கு சவால்!

நண்பர்களே,

நலம்தானே?

வரும் மே பதினெட்டாம் தேதி நிலாச்சாரல் தனது ஐந்தாவது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இந்தப் பயணத்தை மிக இனிதாக அமைத்துக் கொடுத்த தங்கள் அனைவருக்கும் எங்கள் பணிவான நன்றிகள் பல.

ஐந்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மே மாத இதழ்கள் அனைத்துமே விசேஷமாக அமையும். குறிப்பாக சாரல் 260 பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி அதிவிசேஷ இதழாக வெளிவரும்.
இச்சிறப்புக்களோடு வாசகர்களின் படைப்புத் திறனைத் தூண்டிவிடும் நோக்குடன் நிலவுச் சுடர் 2006 என்ற போட்டியை நடத்த விழைந்துள்ளோம். நிலாச்சாரல் வாசகர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டு ஊக்கமளிக்கும் பலவித பரிசுகளை அள்ளிக் கொள்ள மனதார அழைக்கிறோம்.

இந்தப் போட்டியில் பங்கு கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படைப்புகளை விரைவாக எங்களுக்கு அனுப்ப வேண்டியது தான். படைப்புக்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 7. படைப்புக்களின் உட்கருத்துக்கும் வடிவுக்கும் வரைமுறை இல்லை. படைப்புகளை அனுப்பும்போது நிலவுச் சுடர் 2006 போட்டியில் கலந்து கொள்ள உங்கள் ஒப்புதலைச் சேர்க்க மறந்து விடாதீர்கள்!

இப்போட்டியில் பங்குபெரும் படைப்புகளில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ட்ரை ஸ்டார் வழங்கும் ரூ3000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்புக்களுக்கு நிலா ஷாப் வழங்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. இவை மேமாத இதழ்களிலேயே பிரசுரமாக வாய்ப்புண்டு. பரிசு பெறாத படைப்புகளும் நிலாச்சாரலில் பிரசுரமாகலாம்.

விதிமுறைகள்:

1. போட்டியில் பங்கேற்கும் படைப்புகள் வேறு எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது.

2. படைப்புக்கள் உங்கள் சொந்தக் கற்பனையில்/ படைப்புத் திறனில் உருவானவையாக இருக்க வேண்டும்.

3. மேற்கண்ட இரு உறுதிமொழிகளையும் படைப்பாளிகள் தரவேண்டும்

4. படைப்புகளின் மீதான வாசகர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுமானாலும் நிலாக்குழுவின் முடிவே இறுதியானது

5. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் மே 7. போட்டியின் முடிவு ஜுன் முதல் வார இதழில் வெளியாகும்.

6. போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெறாத படைப்புகளைப் பிரசுரிக்க நிலாச்சாரலுக்கு உரிமை உண்டு. வழக்கமான படைப்புகளைப் போலவே இவற்றுக்கு சன்மானம் கிடையாது

போட்டியில் பங்குபெற இயலாத வாசகர்கள் படைப்புகளை விமரிசித்து பரிசுகளை வெல்லலாம். விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்:
http://www.nilacharal.com/notice/feedback_contest.asp


நிலாச்சாரலுக்கு படைப்புகளை அனுப்பும் பொது விதிகளுக்கும், வழிமுறைகளுக்கும் கீழே உள்ள தொடர்புகளைச் சொடுக்கவும்:
http://www.nilacharal.com/write.html
http://www.nilacharal.com/notice/copyright.asp

உங்கள் படைப்புகள் நிலாச்சாரலின் மே மாத இதழ்களை சிறப்படையச் செய்யும் என்பதில் எங்களுக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

அன்புடன்

நிலாக் குழு

3 comments:

Anonymous said...

மாபெரும் பரிசுன்னா என்ன, யானையா?

பரிசு கூட அறிவிக்காம என்னய்யா போட்டி இது?

நடத்துங்க... நடத்துங்க...

நிலாச்சாரல் said...

விதிமுறைகளில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

//இப்போட்டியில் பங்குபெரும் படைப்புகளில் மிகசிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ஒரு மாபெரும் பரிசு காத்திருக்கிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்புக்களுக்கு ஆறுதல் பரிசுகள் உண்டு. இவை மேமாத இதழ்களிலேயே இடம் பெறலாம். பரிசுகள் பெறாத படைப்புகளும் நிலாச்சாரலில் பிரசுரமாக வாய்ப்புண்டு.//

//6. போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெறாத படைப்புகளைப் பிரசுரிக்க நிலாச்சாரலுக்கு உரிமை உண்டு. வழக்கமான படைப்புகளைப் போலவே இவற்றுக்கு சன்மானம் கிடையாது//

நிலாச்சாரல் said...

//மாபெரும் பரிசுன்னா என்ன, யானையா?

பரிசு கூட அறிவிக்காம என்னய்யா போட்டி இது?//


நீங்கள் அநாமதேயமாகக் கேட்டாலும், நியாயமான கேள்விதான். பரிசு முடிவு செய்ய கால தாமதம் ஆகிக் கொண்டே வந்ததாலும் கடைசி தேதி அருகில் இருப்பதாலும் போட்டியை முதலில் அறிவித்துவிட முடிவு செய்தோம். இதோ இப்போது பரிசும் முடிவு செய்தாகி விட்டது:

இப்போட்டியில் பங்குபெரும் படைப்புகளில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ட்ரை ஸ்டார் வழங்கும் ரூ3000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கிறது. மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்புக்களுக்கு நிலா ஷாப் வழங்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. இவை மேமாத இதழ்களிலேயே பிரசுரமாக வாய்ப்புண்டு. பரிசு பெறாத படைப்புகளும் நிலாச்சாரலில் பிரசுரமாகலாம்.