Thursday, April 05, 2007

சாரல் 306

சாரல் : 306 பொழிந்தது : ஏப்ரல் 2, 2007

இந்திய உணவு உற்பத்தி தன்னிறைவில் மீன் வளர்ப்பின் பங்கு
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மீன் உற்பத்திப் பெருக்கம் மீன் வளர்ப்பின் மூலம் சாத்தியம் என்பது 1987-1996 காலக்கட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பின் மூலம் கிடைக்கும் மீன் குறைந்துகொண்டே வருவதால், மீன் பிடிப்பை விட மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக வளர்ந்து கொண்டு வருகிறது. இன்றளவில் இந்தியாவில் மீன் வளர்ப்பிற்காக உபயோகப்படுத்தப்படும் இடம் 10% என்றளவிலே உள்ளது.

( ராஜூ சரவணன் )


அரசியல் அலசல்

பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே பிரச்சினைகளைக் கிளப்பும் கட்சி என்ற எண்ணம் பரவி வரும் வேளையில் எங்களாலும் சமுதாயத்திற்கு நல்ல காரியம் செய்ய முடியும் என்று சொல்வதுபோல் தமிழக பா.ம.க. கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், வாகனங்கள் வெளிவிடும் நச்சுக் காற்றால் ஏற்படும் பாதிப்புக்களை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் மாநில சட்டசபைக்கு பஸ்ஸில் செல்வதற்கு பதிலாக சைக்கிளிலேயே பயணம் செய்தனர்.

( ஜபர )


மனசே சுகமா? (7)
உடனடியாக எதிர்மறை முடிவுக்கு வருதல்: மற்றவர்களையும் நிகழ்வுகளையும் எதிர்மறையாகவே புரிந்து கொண்டு அதிவேகமாக எதிர்மறை எண்ணங்களைத் தூண்டும் முடிவுகளுக்கு வருவது. எடுத்துக்காட்டாக, செல்வனின் புதுவண்டியைப் பார்த்த மோகன், "இந்த வண்டி விலை உயர்ந்ததாயிற்றே" என்று சொல்கிறார். செலவன் அதனை 'உனக்கெல்லாம் எதற்கு இந்த விலை உயர்ந்த வண்டி?' என்று மோகன் மனதுக்குள் நினைத்துக் கொண்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டு, தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற முடிவுக்கு உடனடியாக வருவார்.

( நிலா )


செய்தித் துளிகள்
HIVயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொடுக்கப்பட்டதால் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் 17 வயதான ஜோதி என்ற பெண் மரணமடைந்திருக்கிறாள். அவள் டெங்கு ஜுரத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு 20 யூனிட் இரத்தம் (HIV கிருமிகள் கலந்த) கொடுக்கப்பட்டது. ஜோதி நோய் குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவள் தனது பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஆனால் மறுபடியும் அவள் நோய் வயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் HIVயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

( ஜ.ப.ர )


கவிதைகள்
ஆன்மீகம்
பற்றற்றிரு! சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி

( எம்.ஆர்.நடராஜன் )


சினிமா சேதிகள்
வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இந்திரலோகத்தில் அவருடன் நடிக்க சிம்ரன் இஷ்டமில்லை என்றுவிட்டாராம். இன்னும் பழைய நினைவுகளிலேயே இருக்கும் சிம்ரன் ஒரு புது முகத்துடன் நடிக்க 35 லட்சம் கேட்கிறாராம். கிடைத்த சான்ஸில் நடிப்பதே நல்லது. இன்னும் கொஞ்ச நாள் போனால் சிம்ரனுக்கு சித்தி வேஷங்கள்தான் கிடைக்கும் என்று சிம்ரன் அனுதாபி ஒருவர் சொல்கிறார்.

( ஜன்பத் )


சர்தார் தி கிரேட்! (4)
ரோட்டில் சென்று கொண்டிருந்த சர்தார்ஜி திடீரென நின்று தன்னுடைய டிபன் பாக்ஸைத் திறந்து பார்க்கிறார். ஏன்னு கேட்டா பதில் சொல்றாரு. "நான் ஆபிஸுக்குப் போறனா இல்ல ஆபிஸிலிருந்து திரும்புறேனா அப்படின்னு செக் பண்ணிக்கத்தான்"

( ரிஷிகுமார் )


அந்த ஒரு நிமிடம்
மத்தியதர கணினி நிறுவனத்தில் (250 கணினி இருக்கும் பட்சத்தில்) 250*400=1 லட்சம் மணி நேரம் உறங்குநிலையில் இருக்கின்றது. ஆக ஒரு மாதத்திற்கு வீணடிக்கப்படும் மின்சக்தி 100000*35=35,00,000 Kwh(1Kwh=1 unit). கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என குறைவாக வைத்துக்கொண்டாலும் 21,000 ரூபாய் வீண்.

( கவிதா )


உலகக்கோப்பை 2007

கோச் க்ரெக் சாப்பல் தான் சொன்னபடி கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனச் சொல்கிறார். தேர்வுக் குழுவின் வெங்சர்கார் பழைய வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். தான் சொன்னபடிக் கேட்கவில்லை என்பது அவரது வாதம். கோச்சின் தலையும் தேர்வாளர்கள் தலைகளும் உருட்டப்படுகின்றன.இனிமேல் என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்காலத்தில் இந்திய அணியை வலுப் படுத்துவது போன்ற கேள்விகள் எழுகின்றன.

( டி.எஸ்.பத்மநாபன் )


His Name is Siva Shankar..(241)

Rama is an incarnation of Lord Vishnu. During his exile in the forest, he comes across Pampa river and is fascinated by the surroundings. His mind gets latched on to the beauty of the landscape. It is thought bundle from this body of Rama that finds recourse later in the form of Lord Ayyappa, so that’s why you see Pampa river finding a prime place in Ayyappa’s life.

( N C Sangeethaa )


நானென்றும் நீயென்றும் (60)

"தயவு செய்து நான் சொல்றதைக் கேளு. நீ எனக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்திருக்க. நான் தான் எல்லாத்தையும் தப்பாப் பயன்படுத்திக்கிட்டேன். எத்தனை முறை சாரி சொன்னாலும் நான் செய்தது சரியாகாது. என்னோட தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பண்ணினால் தான் என் மனம் அமைதி அடையும். உனக்கு என் மேல் இருக்கிற கோபம் புரிஞ்சதாலே தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். உன் மனக் காயங்கள் ஆறத் தேவையான காலகட்டத்தைக் கொடுக்க எண்ணித்தான் வெளியேறினேன்

( சுகந்தி )


நீ நான் தாமிரபரணி (64)

"அருணும் நானும் எதற்காக இங்கே வந்திருக்கிறோம்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஒரு காலத்தில் இரண்டு காதலர்கள் இங்கே வந்ததும், ஒரு வருஷம் இருந்ததும் உங்களுக்குத் தெரியும். அவங்க யாருன்னு தெரிஞ்சிக்கறதுக்காக தான் நாங்க வந்திருக்கோம். நீங்க சொல்லத் தயார்னா நாங்க அதுக்கு ஒரு விலை கொடுக்கவும் தயாராய் இருக்கோம்....".

( என்.கணேசன் )


செகண்ட்ஸ்

ஒரு குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்வது தப்பில்லையா என ஒரே ஒரு நாள் சிந்தித்துப் பார்த்துப் பின் அவன் எண்ணத்தைக் கூறச் சொல்ல, அடுத்த நாளே "நிச்சயம் அது தப்பில்லை" என்றான் சுரேஷ். "சரி நானே பத்திரிகை அடிக்கக் கொடுத்துவிடுகிறேன்" என்றாள் மஞ்சுளா.

( லால்குடி, வெ. நாராயணன் )


பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (5)

UFO ஆதரவாளர் ஹைனக் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு ஜூலை 76ம் ஆண்டு சென்றபோது அவரிடம் அங்கிருந்த விஞ்ஞானிகள் UFO பற்றிய கதைகளில் வெளியிடப்பட்ட படங்களைப் பற்றிய உண்மையை அவருக்குக் காண்பித்தனர். அதற்குப் பிறகு ஹைனக் தான் உண்மை எது என்று அறியாமல் தவறான செய்திகளைத் தனது புத்தகத்தில் வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் ufology ஆதரவாளர்கள் ஹைனக் போல் பெருந்தன்மையாக தங்கள் பக்கத்திலுள்ள தவறுகளை உணர மறுக்கின்றனர்.

( டி.எஸ்.பத்மநாபன் )


கவிதைகள்

பேருந்து கர்னாடகாவில் தமிழகப் பேருந்து ஒவ்வொரு முறை எரியும்போதும் யோசிக்கிறது இந்தியா சமத்துவ நாடாம் சொல்லிக் 'கொல்'கிறார்கள்!!

( A.S.P. )


ஜோதிடம் கேளுங்கள்

ராஷஸ வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி 19-9-1975 அன்று பிறந்த தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். தற்பொழுது தங்களின் வயது வரு. 31-5-12 தற்பொழுது சனி தசை நடந்து வருகிறது. 10இல் உள்ள கோட்சார குரு வரும் ஐப்பசி மாறும் பொழுது தங்களின் சிரமங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். 16-11-2007 க்குப் பின் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தைக் காண்பீர்கள். உத்யோகம் சிறப்படையும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். நல்ல பலனை காண்பீர்கள். சிறப்பான வாழ்க்கை வாழ எமது ஆசிகள்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )


பெயர் சூட்டல்

"நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப் பொருத்தமாக இல்லைன்னு ஜோஸியர் சொல்லி விட்டாருடா;. வேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வருதான்னு பார்ப்போம். எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம் காலம் வரணுமோல்யோ" என்றாள். ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.

( வை.கோபாலகிருஷ்ணன் )


காவிய நாயகன் நேதாஜி (44)

சுபாஷ் தமது கடிதங்களில் குறிப்பிட்ட முக்கிய விஷயம், பிரிட்டிஷ் அரசாங்கம் நமது கோரிக்கையைப் போராட்டமின்றியே ஏற்றுக் கொண்டாலும் சரி, அல்லது போராட வேண்டியே நேர்ந்தாலும் சரி, அப்போது இருந்த சூழ்நிலையில், போராட்டத்தை நீண்ட காலம் நடத்த வேண்டிய அவசியமே இருக்காது. இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு துணிச்சலோடு நாம் இறுதிக் கெடுவை அறிவித்து விட்டுப் போராட்டத்தில் குதித்தால் அதிக பட்சம் 18 மாதங்களுக்குள் சுதந்திரம் கிடைப்பது உறுதி.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


அழகு ஓவியம்
அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

No comments: