Tuesday, April 24, 2007

சாரல் 309

சாரல் : 309 பொழிந்தது : ஏப்ரல் 23, 2007

பயம்

ரயில் திடீரென்று 'ஸ்லோமோஷனில்' ஓட, தட தடவென்று ஆட்கள் ஓடி வரும் சப்தம்... மெதுவாகப் போன ரயிலில் திடீரென்று சில முரடர்கள் ஏற... திடீரென்று வெடித்துவிட்ட கலவரம்... முஸ்லீம்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் இந்துக்களுக்கும், இந்துக்கள் அதிகமிருக்கும் பகுதியில் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட துன்பம்.

( விமலா ரமணி )

செய்தித் துளிகள்

இந்த ஆண்டு பாஸ்டன் மராத்தான் பந்தயத்தில் பங்குபெற சுனிதா வில்லியம்சும் அவரது சகோதரியும் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் சுனிதாவிற்குத் தா‎ன் விண்வெளியிலிருந்ததால் மராத்தானில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம். இதைப் போக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் அவர் ட்ரெட்மில்லில் ஓடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு பந்தயம் நடந்த அதே நேரத்தில் சுனிதாவும் தனது பந்தயத்தை விண்வெளியில் துவக்கினார்.

( ஜ. ப .ர )

அற்புதமான, அதிசயமான, அமானுஷ்ய சக்திகள் படைத்த ஹீரோஸ்!

ஐஸக் மான்டேஜ்: நியூயார்க்கில் வாழும் ஒரு ஓவியர்.ஆழ்ந்த சமாதியிலிருந்து எதிர்கால சம்பவங்களைப் பார்த்து அதை அப்படியே ஓவியமாக வரையக் கூடியவர்! ஹிரோ நகாமுரா: ஜப்பானியரான இவர் டோக்கியோவில் வசிப்பவர்.காலத்தையும் வெளியையும் (Space and Time) தன் போக்கிற்கு மாற்றும் வல்லமை படைத்தவர்.இவர் காலத்தை அப்படியே நிறுத்தி விடுவார்!

( ச.நாகராஜன் )

சர்தார் தி கிரேட்! (5)

சாண்டாசிங் : இந்த பீர்ல நிறம் இல்லை.
பாண்டாசிங் : இந்த பீர்ல சுவை இல்லை
தாராசிங் : இந்த பீர்ல திடம் இல்லை
ஒயின்ஸ்ஷாப் காரர் : அட! மக்குகளா…இப்ப நான் குடுத்தது பீர்ல கலக்குறதுக்கான சோடா.

( ரிஷிகுமார் )

மனசே சுகமா? (10)

மேற்சொன்ன சூழலில் 'அமைதியாகக் காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்பது உங்கள் பதிலாக இருக்கலாம். அது நிகழவேண்டுமானால் என்னென்ன தேவை என்று சிந்தியுங்கள். 'ஒரு புத்தகம் இருந்தால் படித்துக் கொண்டிருக்கலாம்', 'டி.வியில் நல்ல நிகழ்ச்சிகள் இருந்தால் பார்த்துக் கொண்டிருக்கலாம்'.

( நிலா )

ஒரு வக்ர மனமும் வர்ஜீனியா கொலைகளும்

இந்த மாணவனை அறிந்தவர்கள் அவன் ஒரு தனியன் என்றும், அதிகம் யாருடனும் கலந்து பேசாதவன் என்றும் கூறுகிறார்கள். அவன் ஆசிரியர்கள் அவன் எழுதும் கவிதைகளிலும் நாடகங்களிலும் ஒரு பயங்கர த்வனி இருந்ததாகச் சொல்கிறார்கள். அவனுடைய அறையிலிருந்து கிடைத்த சில குறிப்புகளிலிருந்து அவன் பணக்காரக் குழந்தைகளிடம் ஒரு வெறுப்பு இருந்ததாகவும் சக மாணவர்களின் நடத்தைகளின் நேர்மைக் குறைவு பற்றிய ஒரு கோபம் இருந்ததாகவும் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

( டி.எஸ்.ஜே. )

Profile of Chinmayi

All India First and Best Performer Award from Sangam Kala Group in the Year 1999 Best Female Playback Singer Award for the year 2002 for the Movie Kannathil Muthamittal from Best Media Associates (Variety Entertainment) Awarded on 18.1.2003

( PS )

ஜபரவின் அரசியல் அலசல்

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் காஞ்சிபுரம் அருகே ஒரு வேன், ரயிலில் மோதியதால் பல உயிர்கள் பலியானது வேதனைக்குரிய விஷயம். இதையும் தனது வேடிக்கை என்று நினைத்துப் பேசும் பேச்சால் ஒரு முதல்வர் "கோவிலுக்குச் செல்வதற்காக வேன் திருப்பப்பட்டதால் கடவுள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டோம்" எனக் கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

( ஜ.ப.ர. )

உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் "தாவரங்களுக்கும் உயிருண்டு"

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

நீ நான் தாமிரபரணி (67)

சொந்த தந்தையாக இருந்திருந்தால் பிடிவாதமாக உரிமையுடன் தன் விருப்பு வெறுப்புகளைச் சொல்லி ராஜராஜன் போராடி இருப்பான். ஆனால் மாமனிடம் அது முடியவில்லை. அவன் தான் படிக்க நினைத்த அறிவுப் பொக்கிஷங்களை எல்லாம் கூட எல்லோரும் உறங்கிய பிறகு திருட்டுத் தனமாய் இரவில் கண்விழித்துப் படிக்க வேண்டி இருந்தது. ஏதோ ஆபாசப் புத்தகங்கள் படிப்பது போல் மாமாவுக்குத் தெரியாமல் இப்படி தன் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்வதில் ராஜராஜனுக்கு திருப்தியிருக்கவில்லை என்றாலும் அவனால் விட முடியவில்லை.

( என்.கணேசன் )

His Name is Siva Shankar..(244)

There is nothing called sorrow. It is non-anticipation of a given problem. A coin has two sides. So you may get either head or tail by tossing a coin. Why should you anticipate just one? He who is prepared for all probabilities, escapes unscathed, is the problem with your thinking or with God?

( N C Sangeethaa )

சினி வம்பு

நமது திரைப்படங்களில் இடைவேளை என்று போடுவார்கள் அல்லவா? ஜப்பான் நாட்டுத் திரைப்படங்களில் ரயோமி என்று போடுவார்கள். இந்தச் சொல்லுக்கு உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அர்த்தமாம் (தமிழ்ப் படங்களுக்கு "விழித்துக் கொள்ளுங்கள் என்று போடலாமோ?").

( ஜ‎ன்பத் )

இஞ்சி ஜூஸ் மற்றும் பச்சடி

சர்க்கரை நன்றாகக் கரைந்து கொதித்தவுடன் இஞ்சிச் சாற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். சற்றுக் குறுகியவுடன் இறக்கி நன்றாக ஆற விடவும். நன்றாக ஆறிய பிறகு எலுமிச்சம்பழச் சாற்றினையும், எஸ்ஸென்சையும் கலந்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால் அஜீரணத்திற்கு கண் கண்ட மருந்து.

( பிரேமா சுரேந்திரநாத் )

நானென்றும் நீயென்றும் (63)

சந்தனா பூஜாவைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று துளைத்தெடுத்துவிட்டாள். அதனால் அவளைச் சாப்பிட அழைத்திருக்கிறான். சமையலறையில் நின்று கொண்டே மெதுவாய்த் தலையைச் சாய்த்துப் படுக்கை அறையை எட்டிப் பார்த்தான். பூஜா படுக்கையில் உட்கார்ந்து பாடங்களைத் தீவீரமாகப் படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 'என் புத்திசாலி பூஜா' மனதுக்குள் மனைவியை மெச்சிக் கொண்டவன் கண்களில் குறும்பு மின்ன விசிலடித்துக் கொண்டே படுக்கை அறைக்குச் சென்று வெளியில் செல்வதற்குத் தயாரானான்.

( சுகந்தி )

காவிய நாயகன் நேதாஜி (47)

காங்கிரஸிலிருந்து சுபாஷ் விலக்கப்பட்டதை எதிர்த்து, காந்திஜிக்கும், ராஜேந்திர பிரஸாதுக்கும், வசை பாடிக் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. சுபாஷ¤க்கு பல இடங்களில் வரவேற்பும், ஆதரவுக் கூட்டங்களும் நடந்தன. பாட்னாவில், காங்கிரஸ்காரர்கள், சுபாஷ் கூட்டங்களில், கல்லெறி, செருப்பு வீச்சு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதைக் கண்டித்து காந்திஜி ஓர் அறிக்கை விடுத்தார். அதில் அவர் சொன்னது: "ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதால், சுபாஷ் (கட்சிக்) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர் அல்லர்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

திருவாளர் பிச்சை

''வாய மூடு" நான் அலறினேன். "என்னை அப்பிடிச் சொல்லாதே... " அவனை அடிக்கக் கையை வீசினேன். உஷார்ப் பார்ட்டி. தடுத்துக் கொண்டான், தவிரவும் விட்டான் சர்ரியாய் ஒண்ணு என் நாடியில். அப்படியே பின்சரிந்து சப்பென உட்கார்ந்தேன். தலைக்குள் ஆதிவாசிகளின் தாரை தப்பட்டை இரைச்சல். சற்றுத் தாமதித்து, சுய நினைவு மீண்டு ஆத்திரமாய் நிமிர்கிறேன். சக்தி இருந்தால் அவனை நார் நாராக் கிழிச்சிருக்கலாம்.

( எஸ். சங்கரநாராயணன் )

நீயெனப்படுவது யாதெனின்..

மெல்ல மெல்ல
தான் எனப்படுவது ஒரு குரங்கென அறிகையில்
தாழவில்லை உனக்கு:
எதன்வழி, எந்த யுகத்தில்
உன்னுள் புகுந்ததோ குரங்கு!
ஆராயப் புகுந்து அலசுகிறாய் அனைத்தையும் அதிதீவிரமாய்
எனினும் குரங்கின் மூலம் பற்றி
எதையும் அறியமுடியவில்லை உன்னால்!

( நட்சத்ரன் )

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

No comments: