Monday, April 09, 2007

சாரல் 307

சாரல் : 307 பொழிந்தது : ஏப்ரல் 9, 2007

'IQ'வை அதிகப்படுத்துவது எப்படி?
ஒரு குழந்தையின் ஐ.க்யூ என்பது எவ்வாறு கூறப்படுகிறது? அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும்.அதாவது அந்த குழந்தையின் ஐ.க்யூ நூறாகும்.

( ச.நாகராஜன் )

கண்ணுக்குத் தெரியாத தளைகள்
அவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி, மகள், மகன் எல்லோரும் உண்டு, நமது பகுதிக்கு வெகு அருகாமையில் தான் அவர்கள் வசிக்கிறார்கள்.அவருடைய மகளுக்கு சமீபத்தில் தான் மணம் முடித்தார். மகன் கணினி தொழில்நுட்பம் பயின்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். நல்ல சம்பளம், அவருடைய மனைவியும் மாநில அரசாங்கத்தில் அதிகாரி யாக இருக்கிறார். சொந்த வீடு, வாகனம் அனைத்து வசதிகளும் உடையவர். இந்தப் பெண்ணின் விஷயம் அவர்கள் யாருக்கும் தெரியாது.

( கு.சித்ரா )

Sivaji – Music Review
A typical Rajini intro song, in the league of “ En peru padayappa”, “Devuda Devuda” etc., S.P.B’s voice bubbles with magic and energy required for the song. The chanting by Raihanah and percussions aptly provide the village based folk feel. Na. Muthukumar has proven once again in his stylish and touching lyrics. Particularly the lines “Koovum cell phone in nacharippai anaithu, sil vandin ucharippai ketpom” mark his presence.

( Vignesh Ram )

செய்திகள் - அலசல்
ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி அளிக்க வேண்டியது அரசின் கடமை, அதற்காக இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனிடம் கொடுப்பது என்ன நியாயம்? மேலும் பல கல்விக்கூடங்களைத் துவங்கி, ஜாதி மத அடிப்படை எதுவுமில்லாமல் அனைவருக்கும் கல்வி அளிப்பதை விட்டுவிட்டு எத்தனை நாளைக்கு தற்காலிகத் தீர்வுகளிலேயே காலம் தள்ளுவது? ஊதுகிற சங்கை ஊதுவோம் விடியும்போது விடியட்டும்!

( ஜ.ப.ர. )

மனசே சுகமா? (8)
ஆன்டனி இதுவரை எப்போதுமே இப்படி நடந்து கொண்டதில்லை கடந்த மூன்று மாதங்களாகவே வேலைப் பளு ஆன்டனிக்கு மிக அதிகம். அதனால் ஒரு வேளை மன அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. 'என்னால் முடிந்ததை எல்லாம் செய்தேன். நேற்று கூட இரவு பதினொரு மணி வரை வேலை செய்தேன். இதற்கு மேல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?' என்று அவர் குரல் உயர்த்திச் சொன்னதில் வேலையை முடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அதிகம் இருந்தது. அவர் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார் என்று அறிந்திருந்தும் நான் அங்கீகரிக்க மறுத்துவிட்டேன்
( நிலா )

அனுமாரும் இந்திராகாந்தியும்
இந்தியாவுக்கு கெடச்ச மேன் ஆஃப் தி மேட்ச் கோப்பையை பர்முடா கேப்டன் புடுங்கிட்டாராம். ஏன்னு கேட்டா, "நீ இலங்கையை ஜெயிச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.. அட்லீஸ்ட் பங்களாதேஷையாவது அடிச்சிருந்தா உனக்கு இந்தக் கப்பு கொடுக்கறதுல அர்த்தம் இருக்கு....ஆனா... நீ அடிச்சது ஒரு புள்ளப்பூச்சியை. அடிக்கிறானாம் அடி... செவனேனு பர்முடா தெருக்காட்டுல கிரிக்கெட் வெளாடிட்டு திரிஞ்சவன்ங்க நாங்க. எங்ககிட்டு வீரத்தைக் காட்டிட்டு கப்பு வேற கேக்குதோ"

( ரிஷிகுமார் )

காவிய நாயகன் நேதாஜி (45)
அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலிருந்து விலகிய சுபாஷுக்கு வங்காளத்தில் ஆதரவு பெருகியது. அடுத்து வந்த வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சுபாஷே தேர்வு பெற்றார். அந்த சந்தர்ப்பத்தில் காலவரையின்றி 80 கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

Have you read this book?
A world of fantasy lying ahead Sometimes really captivating, Sometimes really dreary, Sometimes emotional, At times witty. Like a classical book, Filled with all elements, I am full of perfection and flaws Meek and humble at the outlook

( Arvind )

'சாட்சாத்' பெருமாள்...
''யாரு பாலாஜியா? அகண்ட 'நாமம்', வஸ்த்ரம்...சாட்சாத் பெருமாளே வந்தமாதிரின்னா இருக்கு...", குழைந்தாள் ராஜலெட்சுமி மாமி. ''சும்மா முகஸ்துதி பண்ணாதீங்கோ மாமி...எள்ளு, எண்ணையெல்லாம் தயாரா வச்சுருக்கேளா?., இன்னிக்கு நிறைய இடம் போகணும்", பரபரத்தான் பாலாஜி.
( திரு )

Indian Income tax Queries
When you earn taxable income during the financial year you have to declare your income to the income tax department and file return of income. If you fail to file returns, subsequently during income tax raid the entire accumulated income will be treated as the income of that year and tax will be levied at the maximum marginal rates accordingly. Where as, a result of failure to file the return, the tax evasion exceeds Rs. 1 lakh, the penalty is a fine and imprisonment that could vary in term between 6 months to 7 years.

( NM.Ilangumaran )

சினி வம்பு
சிம்புவின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் 'முனி' புகழ் வேதிகா. ஒவ்வொரு கதாநாயகியாகக் கழன்று கொள்ள, கடைசியில் இந்தக் "காள"யின் (படத்தின் பெயராம் ) திமிரு (ஆமாம் இப்படத்தை டைரக்ட் செய்பவர் திமிரு படத்தை இயக்கிய தருன் கோபி) அடக்க வேதிகா மணி கிட்டியிருக்கிறார்.

( ஜன்பத் )

நீ நான் தாமிரபரணி (65)
ஈஸ்வரன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவரைப் பார்த்தார். ஈஸ்வரனின் பார்வை மிகப் பிரபலமானது. பலரைத் திகிலுக்கு உள்ளாக்குவது. சாம்பசிவத்துக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. ஈஸ்வரனின் மௌனமான பார்வையைத் தாங்க முடியாமல் சாம்பசிவம் கேட்டார். "என்ன பார்க்கிறாய் ஈஸ்வரன்?"
( என்.கணேசன் )

His Name is Siva Shankar..(242)

In a major way, Fear is the root cause for everything. Why do you refuse to go to the forest? You fear that a tiger may pounce on you. Otherwise how does the forest affect you? What a beautiful specimen forests are, of God’s artistry? It is only because you fear the tiger, does the tiger hit you. If you go without any such thoughts near the tiger, it may not even notice your presence.
( N C Sangeethaa )

நானென்றும் நீயென்றும் (61)

அவினாஷிற்கு ஏதாவது சாப்பிடத் தயார் செய்யலாமா? பசியோடு இருக்கும் போது சட்டென்று கோபம் வரும் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் என்ன சமைப்பது என்று புரியவில்லை. அவளுக்கு சமைக்கத் தெரிந்ததே ஏதோ கொஞ்சம். அதிலும் அவினாஷ் என்ன சாப்பிடுவான் என்று அவளுக்குச் சுத்தமாகத் தெரியாது. அங்கே வீட்டிலிருக்கும்வரை எப்போதுமே கமலா தான் சமையல் பொறுப்பு. தண்ணீர் குடிக்கக் கூட சமையலறைக்குச் சென்றதாய் அவளுக்கு நினைவில்லை.
( சுகந்தி )

குரங்குசூழ் உலகு

தத்தம் குரங்குகளுக்கிடையே விதவிதமாய்ச் சண்டை மூட்டி விளையாடிக் களிக்கிறார்கள் குரங்காட்டிகள் நகத்தை வைத்து பிற குரங்குகளைப் பிராண்டியும் கர்புர்ரெனக் கத்தியும் குதித்தும் குட்டிக்கரணமிட்டு வித்தைகாட்டியும் ஜரூராய் விளையாடிக்கொண்டிருக்கின்றன குரங்குகள்
( நட்சத்ரன் )

இராசி பலன்கள் 9-4-2007 முதல 15-4-2007 வரை

விருச்சிக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வரவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு. மனைவியால் பொருள் வரவு உண்டு. தந்தை மகன் உறவால் பிற பிரச்சனைகள் வந்து நீங்கும். பழைய வாகனங்களைப் பழுதுபார்க்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும்.

( ப. இசக்கி )

சைவ சிங்கம்
"மான்களும் பெரிய அகலமும் ஆழமும் கொண்ட பள்ளம் ஒன்று வெட்டி குச்சிகளையும் இலைகளையும் போட்டுத் தரை போல் ஆக்கின. சில நாட்கள் சிங்கத்திற்கு உணவாகும் பிராணிகள் வெளியில் போகாமல் மறைந்து கொண்டன. சிங்கம் பசியால் கர்ஜித்துக் கொண்டு உணவு கிடைக்காமல் தேடி அலைந்த சமயத்தில் மான்கள் சிங்கம் வரும் திசையின் பள்ளத்திற்குப் பின்னால் நின்று கொண்டு நாட்டியம் ஆடின. அதைப் பார்த்து அதன் மேல் தாவிய சிங்கம் பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொண்டது.

( P.நடராஜ‎ன் )

வம்சம்

அன்று இரவு நிசப்தமாக இருந்தது ரோஸி ஏன் அழவில்லை? அழுதழுது உயிரை விட்டுவிட்டதா? ரேவதி மெல்லக் கதவு திறந்து பார்த்தாள். அங்கே ரோஸி படுத்திருந்தது. இவள் மதியம் போட்ட சாப்பாட்டைக் கூட சாப்பிட்டிருந்தது. அதோடு... ரோஸியிடம் மூன்று சின்னஞ்சிறிய பூனைக்குட்டிகள் பால் அருந்திக் கொண்டிருந்தன. இவளைக் கண்டதும் ரோஸி மசிழ்ச்சியுடன் வாலாட்டியது.
( விமலா ரமணி )

சர்வஜித்தே வருக !
தமிழ் புத்தாண்டே வருக தலை நிமிர்ந்து வருக தமிழர்நிலை உயர வருக தமிழ்மொழி சிறக்க வருக! உலகில் அமைதி காக்க வருக உழைப்பின் பெருமை உயர வருக உயர் அறங்கள் வளர வருக உறவை உயர்த்த வருக! வருக!

( என். வி. சுப்பராமன் )

முளை கட்டிய கொள்ளு குருமா
கொள்ளை முன் தினமே ஊற வைத்து முளை கட்டி தயாரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சிகப்பு மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வெங்காயத் துண்டுகளையும் நறுக்கிய பூண்டையும் இஞ்சித்துண்டுகளையும் வதக்கிக் கொண்டு தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு தனியாத்தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

No comments: