Tuesday, August 14, 2007

சாரல் 325

சின்னச் சின்ன சினி சேதிகள்
அழகிய தமிழ் மகன் படப்பிட்டிபிற்குக் கால ஷீட் பிரச்னை தருகிறாராம் ஸ்ரேயா (சிவாஜி கொடுத்த தெம்போ?) விஜய் அவரை அழைத்து டோஸ் விட்ட பின்பு கூட சொதப்பல்தானாம்.

( ஜன்பத் )

சுதந்திரதின இ-வாழ்த்து
சுதந்திரதின இ-வாழ்த்து அட்டைகளை அனைவருக்கும் அனுப்பி மகிழுங்கள்.

( Nilateam )

போனஸ்
அழகழகான கோலங்கள் நமது 'முற்றம்' மின்னூலிலிருந்து - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )

நிலாவட்டம் (8)
"அந்த நேரத்துல அந்த ஃபிளாட்ல ஒரு பொண்ணு மட்டும் தனியா இருந்திருக்கு. பயந்து சத்தம் போட்டிருக்கு. நைட் அவர் வந்ததும் தகவல் தெரிஞ்சு ஒரே கலாட்டா...

( ரிஷபன் )

ஜாதிப்பூ
பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டம் இல்லை.வழக்கம் போலப் பூக்காரக் கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும்படி வேண்டினான்.

( மீனா சங்கர் )

தினமணி சந்தானம் - பன்முகப் பத்திரிக்கையாளர்!
நூற்றுக்கணக்கான கூட்டங்களின் ஆன்மீக, கலாசார, இலக்கிய செய்திகளை பேசி நற்பண்புகளைப் பரப்பிய அவர், முதன் முதலாக லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை மொழி பெயர்த்து தமிழுலகிற்கு அளித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

( ச.நாகராஜன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (1)
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

காவிய நாயகன் நேதாஜி (63)
"முன்னணிக்குச் செல்லும் கடைசி நிமிஷம் இது. இப்போது கூட நான் உங்களுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். நமது லட்சியத்துக்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

சாப்பிடும்போது சாப்பிடு! தூங்கும்போது தூங்கு!
ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், நல்ல கார், பெரிய வீடு, உயர்ந்த சம்பளம் - கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்.

( ரிஷிகுமார் )

Hariharan
A.Hariharan ("Hari") and Leslie ("Lezz") Lewis became the first Asians and only Indians so far to have performed on the prestigious show.

( PS )

அரசியல் அலசல்
நம் அணுச்சோதனைக் கூடங்கள் அமெரிக்காவின் மேற்பார்வையிலேயே இயங்கவேண்டியதாயிருக்கும். இப்படி ஒரு அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்து ஒரு அணுசக்தி ஒப்பந்தம் போடவேண்டுமா?

( ஜ.ப.ர. )

செய்திகள் அலசல்
பிரிட்டனில் மிகப்பெரிய விருதான சார்லஸ் விருது திரு.அப்துல் கலாமிற்கு அவரது விஞ்ஞானத்திற்கான சேவையைப் பாராட்டி வழங்கப்படுகிறதாம்.

( ஜ.ப.ர )

அச்சம் தவிர்
அறைக்குள் நுழையும் போது ராம்ஜியின் கவனம் முழுவதும் அவர்கள் தன்னை மட்டமாக எடை போட்டுவிடுவார்களோ என்ற பயத்திலேயே இருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகளில் மனதை ஈடுபடுத்த இயலா நிலையில் ஏதோ ஒரு பதிலை உளறிவைக்கிறார்.

( நிலா )

வெற்றி நோக்கி இரு பலூன்கள்
தன்னுடைய வெற்றியை விடத் தன்னால் ஒருவரை வெற்றி பெறச் செய்யமுடியும் என்பதே ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதைப் பவித்ராவும் புரிந்து கொண்டாள்.

( வை. கோபாலகிருஷ்ணன் )

His Name is Siva Shankar..(260)
Likewise you too must be capable of expressing love for God. It is not enough to feel love

( N C Sangeethaa )

இறால் வறுவல்
இறாலைக் கழுவி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு முதலில் அரைத்த விழுது எல்லாவற்றையும் கலந்து வைத்து கொள்ளவும்

( மீனாகுமாரி )

இராசிபலன்கள் (13-8-2007 முதல் 19-8-2007 வரை)
துலா ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொது நலக் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

( டாக்டர்.ப.இசக்கி )

கறுப்பினழகு!
இந்த மாதிரி பொறுமையான, தன்மையான மாப்பிள்ளை அமைஞ்சாத்தான் வாழ்க்கை நல்லபடியா அமையும். மனசுப் பொருத்ததை விட வேறெதுவும் முக்கியமில்லை தெரிஞ்சிக்கோ.

( ஸ்ரீ )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (6)

சிவகாமி உணர்ச்சி வசப்படும் நபர் அல்ல என்பது அவள் பேச்சிலேயே நன்றாகத் தெரிந்தது. அவள் இப்போதும் அவளை அசத்தினாள்.

( என்.கணேசன் )

கனவாகி!
பதிலுக்கு நான் அவரைக் கேட்டேன். எழுபத்தஞ்சு வயசுடா, இனிமே அசட்டுத்தனமாக் கேட்காதே. கணக்குப் போட்டு பார்த்தா, இதுவே ஜாஸ்தின்னார்"

( ரிஷபன் )

கவிதைப்பூக்கள்
சொன்னதையே சொல்கிறாய்
சொன்னதைத்தான் சொல்கிறாய்
மீண்டும் மீண்டும் நில்லாமல்

( )

After a magnum opus
Keeping it open I dream looking at it and me holding it aloft like Martina Navratilova each time

( A. Thiagarajan )

No comments: