Monday, June 15, 2009

"சாரல் 421"

தீவிரவாதிகளின் இடைவிடாத தாக்குதல், இந்திய கமாண்டோக்களின் எதிர்ப்பு... கமலினி குடும்பத்தைப் பற்றிய தகவலின்மை.
நீச்சல் பயிற்சியானது மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனால் உடல் தசைகள் அனைத்திற்கும் எவ்விதக் கடின முயற்சியுமின்றி பயிற்சியளிக்கப்படுகிறது.
மகிழ்ச்சி, மனத் தெளிவு, தூய்மையான மனம், கனிவான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், திற‎ன் கூடுதல், வாழ்க்கையில் திருப்தி - எல்லாவற்றிற்கும் மேல் நிம்மதி.
ஆற்றுப்பாலத்தில் நடந்தபோது.. காதருகே சொன்னது.. 'சபாஷ்'
ஒரு முறை எழுதியதை ஈசன் வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எந்த பாகுபாடும் தெரியாது
பெரிய இசை மேதையாக இருந்தவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்யப் பிடிக்காதவராக எளியவராக வாழ்ந்து வந்தார்.
எனக்கு ரொம்பலாம் ஃபிலாஸஃபி, சைக்காலஜியெல்லாம் தெரியாது! இருந்தாலும் கெஸ் பண்றேன் - கடைசியில உண்மைதான் ஜெயிக்கும்; ஜெயிக்கணும்
நேர்புள்ளி 10 x 10
 
பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்
என் பையனிடம் ''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு' என்கிறேன் சில நாட்களாய்.
 
பாபி : ஏன் உங்க வீட்டு டி.வி. ஸ்கிரீன்ல 8.55க்கு தண்ணீர் தெளிக்கிறாங்க? ஜோ : சன் டி.வில 9 மணிக்கு கோலங்கள் போடுவாங்கள்ள.. அதான்!
"அது மூணாந்தேதி. மாச ஆரம்பம். கை நிறைய காசு புழங்கற நேரம். இந்தப் பேப்பர்க் காசு அன்னிக்கி வந்திருந்தா, கடல்ல கரச்ச பெருங்காயம் மாதிரி காணாமப் போயிருக்கும். இப்ப மாசக் கடேசில இந்தக் காசு எவ்வளவு விசேஷமாத் தெரியுது பாருங்க. எப்படி நமக்குக் கை குடுக்குது பாருங்க!
"அப்ப நீ வந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணப்போறியா? அந்த மாதிரி எதுவும் நடக்காது, நடக்கப் போறதுமில்லை. இந்த ஐந்து வருஷத்திலே நீ என்னைத் தெரிஞ்சிண்டது அவ்வளவுதான் போல இருக்கு. நான் ப்ராத்மிக் ஆரம்பிச்ச அன்னிக்கி என் கணக்கை நிமிஷமா போட்டியே அதுதான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்."
தங்களின் ஜாதகப்படி தங்களுக்கு கிடைக்கும் அரசியல் தொடர்புகள் மூலம் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இயலும்.
தன்னை வளர்த்துப் படிக்க வைத்த நன்றிக்குத் தன் பெற்றோர்களுக்குத் தக்க கைமாறு செய்துவிட்டதாகத்தான் தேவா எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் தந்தையின் எதிர்பார்ப்பு வேறுபடுவது புரிந்த போது இன்னும் தான் பட்ட கடன் எவ்வளவு என்ற குழப்பம் அவனுக்கு எழுகிறது. வெளிப்படையாய்ப் பேச முடியாத இப்படிப்பட்ட பாசக் கணக்குகள் மிகச் சிக்கலானவை.

Tuesday, May 26, 2009

"சாரல் 418"

இத்தனை வருஷங்கள்ல இந்த கலிகாலத்துல நீ பழகின ஆள்கள்ல ஒரு கெட்டவனை உனக்கு சொல்லத் தெரியலை...இது உனக்கு ஆச்சரியமாயில்லையா
ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் தங்களை நாடி வரும்
"அபார்ட் அபார்ட்" என்று ரத்னத்திடம் கத்தியபடி, கதவைத் திறந்து, ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு இருபதடி ஆழத்தில் ரத்னம் இருந்த தீவை நோக்கி நீந்த ஆரம்பித்தான்
தெரியாமலே சுவாசிக்கிற என்னை தெரியாமலே நேசிக்கிற ஜீவனாய் என் மூச்சுக் காற்று...
மழை வரும் வரை பாட்டுப் பாடுவது நிற்காது என்பது அவர் செய்த சபதம். நான்கரை மணி நேரப் பாட்டிற்குப் பின்னர் மழை ஓவென்று பெய்தது
அந்தத் தலை கீழே உருள, எல்லோரும் அதை நோக்கி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது
பசங்களை தோழமையோட அணுகி சொல்ல வேண்டிய விஷயங்களை அந்தந்த கால கட்டத்துல சொல்லி அவங்கள நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெத்தவங்களுக்கு இருக்கு
பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன். ஹோம் ஒர்க் செய்யாமல் பெஞ்ச் மேலே ஏறி நின்ற போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்!
4. பருப்புகள் சிவந்தபின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்
நிலையான, சுதந்திரத்துடன் செயல்படக்கூடிய ஒரு அரசு தேவை என உணர்ந்து வாக்களித்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஒரு நல்லாட்சி மலருமென நம்புவோம்!
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே? திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?
பிறந்து புதிய நாகரிகம் பீடுடன் இளமை நடைபோடும்; திறந்த சரிதை ஏடுகளில் திரும்பத் திரும்ப இதுகாணும்.
பா. விஜய், ரொம்பவும் எளிதான காதல் வரிகளை உபயோகப்படுத்தியிருக்கின்றார். உதித் வார்த்தைகளை எல்லாம் நன்றாக கடித்துத் துப்புகின்றார்
உடலின் இரத்த நாளங்களில் சுமார் ஐந்து பங்கு அளவுக்கு இரத்தம் ஓடுகிறது; இதில் மூன்று பங்கு தண்ணீர்தான் கலந்துள்ளது

Tuesday, May 19, 2009

"சாரல் 417"

தங்களின் ஜாதகப்படி, காதலித்தவருடன் திருமணம் நடைபெறும் வாய்ப்பிருக்கிறது.
காலத் தேரின் ஓட்டத்தில் காலைக் கதிரோன் மீண்டுவந்தான்; கனலும் பொறிவைத் தூதுகிறான்.
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும்.
குருவே.. நான் இங்கு சாந்தி தேடி வந்துள்ளேன். மகனே.. இங்கு சாந்தி என்று யாருமில்லை.. பக்கத்து ஆசிரமத்தில வேணும்னா போயி தேடிப் பாரேன்..
இதழ்கள் சந்திக்கும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காதலன்/ காதலியருக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது - மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது
அப்படின்னா அந்த நாள் ராத்திரி நடந்தது ஒரு கொலை இல்லை மூர்த்தி. ரெண்டு கொலை.
 
ஏனோ தெரியல, திடீர்னு என் தன்னம்பிக்கை குறையற மாதிரி இருக்கு! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா! என் மேல எனக்கு திடீர்னு பயம் வந்ததுனாலதான், விஜயனைப் பிடிச்சவுடனே உங்க கஸ்டடியில அவனை விட்டேன்
ஆமாம்! புதிதுதான். இவளா என் தங்கை. என்னைப் பெண் பார்க்க வந்தவன் கடைசி நிமிட அதிர்ச்சியாய் இவளைத் தேர்ந்தெடுத்து எங்கள் சம்மதம் கேட்டதும், துளிக்கூடத் தயங்காமல் இவள் சம்மதித்ததும்.. புதிதுதான் எனக்கு
9 x 9 நேர்புள்ளி
காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் - நமது பணம் - ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை..
எங்கள் அவலம் ரேடியோ ஸ்டேஷன் வரை தெரிந்துபோக, "என் குத்தமா உன் குத்தமா" என்று பாடினார் இளையராஜா
அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்கக் கூடியதாக உணர்வார்கள்
வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர்
 
மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போது போகிறேன்

Tuesday, May 12, 2009

"சாரல் 416"

செல்லுல பேசி மெக்கானிக் யாரையாவது கூப்பிடலாம்னு பார்த்தா டவரும் கிடைக்க மாட்டேன்குது. சே என்ற பார்த்திபனுக்கு உள்ளே லேசாக பயம் கிளம்ப ஆரம்பித்திருந்தது
வேரின் வழியே நீரருந்தி வேர்வை சிந்தி நான்வளர்தல் பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து பட்டுலர்ந்த பின்ஒரு நாள்
நல்ல வேலை செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும். தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பிருக்கிறது.
தனது காலத்தில் அடைய வேண்டிய புகழையும் பெருமையையும் அவர் அடையவில்லை என்பது தமிழர்களுக்கு மாபெரும் இழுக்குதான்!
 
முருகன் மனசு வைச்சானெண்டா ஏலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது
இரண்டு நகராத சைக்கிள்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது. இன்னொன்றில் ஆமை வேகத்தில் பெடல் செய்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்
 
ராஜராஜ சோழன் ஆட்சியமைப்போம் என்று முழங்கி வந்த தாங்கள், சின்ன ஜமீன் அளவுக்குக் கூட ஆட்சியமைப்பதில் திறமையற்றவர்கள் என்பதை உணர்வதே உங்களுடைய மிகப்பெரிய வெற்றியாகும்.
தனுசுராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இது வரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப் பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பசித்தவருக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருகிறார். ஒரு நாய் பட்டினி கிடந்தால் கூட அத்தனை கடவுள்களுக்கும் அத்தனை மதங்களுக்கும் அர்த்தம் இல்லை

Tuesday, May 05, 2009

"சாரல் 415"

வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
காதலிளம் ராதை தந்த கனிமுத்தத் தித்திப்பின் போதையிலே அமு தூறிப் புல்லாங் குழல் இசைக்க
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. எல்லா விதமான பாடல்களையும் தருகின்றார்
 
மனதை ஒருமுகப்படுத்தும் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வர, குழப்பங்கள் நீங்கி, சிந்தனை வளம் பெருகும்.
எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இரண்டு பெட்டிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன, சந்தேகமில்லை. எல்லா பொருட்களும் திரும்ப கிட்டத்தட்ட பழைய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒன்றைத்தவிர
ஆனா அவ்வளவு அழகான இடம் இந்த நீலகிரி ஏரியாவிலேயே இல்லைங்கறார். கோத்தகிரிக்குப் பக்கத்துல இருக்காம் அந்த இடம். போயிட்டு வர்றோம் சித்தி
நேசம் கேட்டா வாழ்வு தருவான், பாசம் கேட்டா உறவு தருவான். நாம் கேட்கும் முறைகள்தான் நம்மை வாழ வைக்கின்றன
ஒரு செயலைச் செய்யும்போது வரக்கூடிய இடையூறுகள் அந்தச் செயலை நாம் இன்னும் நன்றாகச் செய்ய தானாகவே ஏற்பட்ட வாய்ப்புகள்
பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
 
கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.
சரியான டீடெல்ய்ஸ் தெரியாது, கான்ஃபிடென்ஷியல்! நம்ம ஊரைத் தாண்டி சுமூகமா போகுதான்னு செக் பண்றதுதான் எங்க வேலை! அதைக் கடத்த ஏதோ ஒரு கும்பல் ப்ளான் போட்டுருக்குன்னு கண்டுபிடிச்சோம்
கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை
 
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயணமும் இருக்கும்
 
கோடிக்கணக்கான வாக்காளர்கள் - அவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் கல்விக்கண் திறக்காதவர்கள் பங்கு கொள்ளும் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி வரும் நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே

Tuesday, April 28, 2009

"சாரல் 414"

சிறிது போராட்டத்திற்குப் பின் காதல் கை கூடும் வாய்ப்புக்கள் உள்ளன.
(இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா? மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.
நேரத்தில் கணீரென்ற குரலில் ருத்ரமும், சமகமும் சொல்லி சாளக்கிராமத்திற்கு அபிஷேக ஆராதனை செய்வார்
ஓடிடும் வானத்தில் உற்கைகள் பற்பல உன்னொளிர் மேனியின் கண் ணிருந்து
தெரியலை! ஐயம் லாஸ்ட்! ஒண்ணு இவன் பேசற வரைக்கும் வெயிட் பண்ணணும்! இல்லே முதல்லேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கணும்
அப்படியே வேகமாகப் போய் சுவேலம் என்ற குன்றின் மேல் ஏறி அங்கிருந்து லங்கையைப் பார்த்தார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமித்து விட்டார். அன்றிரவு பூர்ண சந்திரன் இருப்பது போல பிரகாசமாயிருந்தது.
அதற்கு ஆதாரமாக அரசியல்வாதிகளைச் சமாளிப்பது, மாநாட்டில் கலந்து கொள்வது அவர் பொறுப்பு
சுவை புதிது; நயம் புதிது; வளம் புதிது; சொற் புதிது; ஜோதி கொண்ட நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை
கல்வி அறக்கட்டளைக்கு உதவி கேட்டு நேருவிற்கு எழுதிய கடிதமும், அதற்கு நேரு எழுதிய பதில் கடிதங்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
 
எவ்வளவோ முயன்றும் கடைசியில் தோற்றுப் போகிறது என்னிடம் குடையைப் பறிக்க முயற்சித்த காற்று......
 
நம்மால எது முடியுமோ அதச் செய்ய முயற்சி செய்யலாம்ல? எத்தனையோ தடவ இந்த நோட்டீஸப் பாத்ததாச் சொல்றீங்களே, ஒரு தடவையாவது இந்த ஃபோன் நம்பர நோட் பண்ணீங்களா?
அவன் ஒரு சினேகா ரசிகனாம்; அவங்க கனவுக்கன்னி சினேகா சொல்லிருக்காங்களாம், "எடுத்துக்கோ, எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில எடுத்துக்கோ" அப்படினு.
கச்சிதமா செய்யணும். சொதப்பக் கூடாது. ஞாபகம் வச்சுக்கோ. எதுலயுமே டைமிங் தான் ரொம்ப முக்கியம். எதிரியை எந்த நேரத்துல எப்படித் தாக்கணும்கிறதுல எப்பவுமே தெளிவா இருக்கணும்.
"அந்தத் திருடன் நான்தான். பாபாவின் அந்தச் செயல், அந்த மனித நேயம், அந்தப் பணிவு என்னை மாற்றி விட்டது. என் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, நானும் பாபாவைப் போல ஆத்ம ஞானத் தேடலில் இறங்கிவிட்டேன்" என்றார்.
பயற்றம்பருப்பு சேர்த்துத் தயாரிக்கப்படும் மணத்தக்காளிக் கீரை கூட்டு, வயிற்றுப்புண்ணையும், வாய்ப்புண்ணையும் குணப்படுத்தக்கூடியது.

Tuesday, April 21, 2009

"சாரல் 413"

பணிக்குத் துணை புரியும் துறைகளில் தங்களின் கவனத்தை செலுத்தி வர, நல்ல முன்னேற்றம் அடையலாம்.
அதுவரை சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த கதாநாயகி அல்லது நாயகனுக்கு ரத்தப் புற்று நோய் - அதாவது 'ப்ளட் கான்சர்' என்பார்கள்
 
இருட்டாக இருந்ததால், கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், ஒரு உருவம் நகர்வது மட்டும் தெரிந்தது.
 
ஆன்மீகத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்ட அவருக்கு இது கை வந்த கலையாக ஆனது! சுமார் 2000 பாடல்களையும் கிருதிகளையும் தமிழில் எழுதி தமிழ் தியாகய்யா என்று போற்றப்படும் பெரிய புலவர் ஆனார்
வானத்தை விட உயர்ந்ததாய், நிலத்தை விடப் பெரியதாய், கடலை விட ஆழமாய் எண்ணிய என் காதல்... என்னவாகும்?
ஆக்கத்தின் சுனைப்பெருக்கே! அன்பறத்தின் உருவகமே! அப்பாவே! அருளாளா! அழுகின்றோம்; - உனைக் காணோம்
உலக அமைதியை அழகாய் வலியுறுத்துகின்றது இந்தப்பாடல். நன்று!
நானோ, அன்னையெனக் காண்பது, என் அன்புத் தோழியை அன்றோ!
சத்தியமா தெரியாது. அம்மாவைப் பொறுத்த வரை நான் பலவீனமானவள். அதனால் என் கிட்ட எதுவும் சொல்றதில்லை. நீ எதிர்த்துப் பேசறவன்னு உன் கிட்டயும் சொல்ல மாட்டாங்களே. பிறகு உனக்கெப்படி தெரியும்
தொத்தாங்கொட்டை என்னும் கொட்டையை அடியில் தேய்த்த ஒரு பாத்திரத்தில் இப்படிச் சேகரிக்கப்பட்ட நீரை எடுத்து வந்தால், வீடு வருவதற்குள் சுத்தமான குடிநீர் ரெடி!
கும்பலில் பாதிக்குமேல் கோழியைப் பின்தொடரும் குஞ்சுகள்போல் சின்னஞ்சிறு குழந்தைகள். அவர்களும் சக்கரம் வைத்த சிறுபெட்டிகளை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தார்கள்.
சிறை அதிகாரிகளுடன் பேச்சுக் கொடுத்ததில் அவர்களும் இத்தகைய புதிய சிந்தனைகளுக்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்றும் பாரதி சொன்ன வார்த்தைகள் நினைவில் இருந்தால் எந்தத் தோல்விகளும், தடைகளும், தடங்கல்களும் நம்மை ஒன்றும் செய்யாது.
நான் கொஞ்சம் குண்டுதான், ஆனால் என் குடும்பத்தில் எல்லோருமே சற்று பருமன்தானே! அது குடும்பவாகு!
பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை நன்றாக சிறு தீயில் கிளறி விடவும்.கசப்பு சுவை இல்லாமல் கீரையை நன்றாக வதக்க வேண்டும்.

Tuesday, April 14, 2009

"சாரல் 412"

செவ்வாய்க் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
ஆமாம்! பயங்கர அவசரம்தான்! கொஞ்சம் இருங்க அங்கிள்! என்று சொல்லி உடனே கோர்ட்டுக்குள் ஓடினாள்
தங்கமே காய்ச்சினாலும் தன்மையில் உயர்தல் போல மங்கிடாக் கீர்த்தி பெற்றாய்
ஒரு முறை திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும்போது கார் ஒரு ரெயில்வே லெவல் கிராஸிங்கில் நிற்க வேண்டியதாயிற்று. வழக்கம் போல அவரைப் பார்க்க அங்கே ஒரு கூட்டம் குழுமி விட்டது
 
விற்பனையை எக்கச்சக்கமாக அதிகரித்துக் கணக்குக் காட்டியிருந்தால், நடக்காத விற்பனைக்கு வரி கட்டியிருக்க வேண்டுமே? கட்டினார்களா? எப்படிக் கட்டினார்கள்?
 
நம்முடைய இன்றைய நிலை நம் எண்ணங்களைச் சிறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. மாறாக நம் பெரிய கற்பனைகள், பெரிய திட்டங்கள், நம்மை இன்றைய நிலையில் இருந்து சிறை மீட்கும்
நீங்கள் ஏதேனும் கடை வைத்திருப்பவராய் இருந்தால் வாடிக்கையாளருக்குத் திரும்ப பயன்படுத்தும்படியான பைகளை ஒரு சிறுவிலை வைத்து பாலிதீன் கவர்களுக்குப் பதில் தரலாம்
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!
நான் அந்த விம்பிள்டன் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்த போது "ஏன் எனக்கு மட்டும்?" என்று இறைவனைக் கேட்கவில்லை, இப்போது வலியால் தவிக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் ஏன்.. என்று கேட்கலாமா?"
நீ இங்கே வந்தது உங்கம்மாவுக்குத் தெரியுமா? அவன் குரலில் பீதி இருந்தது.
உறவுகளை இரவல் பெற்று வாழும் பரிதாபகர வாழ்க்கை! இதுதான் உண்மை!
இவ்வளவு தூரம் சிரமப்பட்டு. . வெளியே போய். . ரகசியமாய் வாங்கி . . இத்தனை படியேறி. .
 
நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.
 
தலைவன் அவன் தன் தாள் பற்றினேன் நாளும் பொழுதும் ஒவ்வொரு கணமும் தடம் பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் துணையிருக்கும் ஆசான் அவனே
சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.

Tuesday, April 07, 2009

"சாரல் 411"

எல்லாவற்றிலும் அருணுக்குதான் முதலிடம்....முன்னுரிமை....யாவும்! இப்போதோ......அருண் அவன் அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு ஓடத் துவங்கிவிட்டான், அவளை விட்டும், அவள் வரைந்த அன்பு வட்டத்தை விட்டும்!
நுண்கலைகளில் ஆர்வம் உள்ள தங்கள் மகளின் ஜாதகத்தில் புதன் 10-ல் நன்றாக உள்ளதால், நல்ல கல்வி உண்டு.
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு ‏ இருக்கீங்க? மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்‎னு சொன்னாங்க.. அதான்
துப்பாக்கியின் ஸ்கோப்பினுள்ளே விஜயன் தெரிந்தான். கையை ட்ரிக்கரின் மேல் வைத்து அழுத்த முடிவு செய்தான் ஸ்நைப்பர்
உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ஒரு தங்கமான மனசைக் கொடுத்திருக்கிறார் பார்
சின்னப் பெண்ணான போதிலே! அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா நீ சொல் என்றேன்!
 
தப்பா எடுத்துக்காத, எதனால இப்படி ஒரு மாதிரியா யோசிச்சு, உங்கள நீங்களே ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுக்கிறீங்க. சுதந்திரமா இருங்க
களைப்பாக இருக்கும் போது இடது நாசியை மூடி வலது நாசியினால் சுவாசித்தால் மனம் புத்துணர்ச்சி பெறுவது நிச்சயம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை விடவும். எண்ணை காய்ந்தவுடன் கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
மனிதர்கள் புகழ் அடைய முயற்சிப்பதே நிறையப் பெண்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் என்று "பெட்ஸிக்" சொல்கிறார்
உண்மையான தலைவர்கள், தான் தலைவனாக வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. யார் தடுத்தாலும் நிற்காத சூரிய உதயம் போல் உண்மையான தலைவர்களை இயற்கை வெளிக்கொணர்ந்து விடுகிறது
அந்திவரும் வேளையிலே அடுத்ததினம் மாலையிலே, சுந்தரமாம் யமுனைநதிச் சூழலிலோர் மேடையிலே
தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்...
அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான்தான் வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டது . அப்போதுதான் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழியில் குழந்தைச் சத்தம் கேட்க, கடவுள் அருளால் கிடைத்த குழந்தை என்று மகிழ்ந்து அவளுக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்க்கலானான்.
ஒரே அளவு நீர் தேவைப்படும் செடிகளை ஒரு குழுவாக அமைப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்கலாம்

Wednesday, April 01, 2009

"சாரல் 410"

முகமறியா தோழமைக்காய் முத்தெடுக்க நீ குதித்தாய்.. மூழ்கியதை மறந்து விட்டாய்! கரையினையும் துறந்துவிட்டாய்!
தங்களின் ஜாதகத்தில் குரு 9-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தங்களின் எதிர்கால வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்? ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!
எனக்கு உடனே ஒரு பெரிய பேப்பரும் பேனாவும் வேணும்! சுவரில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்
ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்.... வா. உட்கார்
 
'உன்னால்தான் யாவும்' என்றே இருவரும் இணைந்து எட்டி உதைத்தபோது, ஏதும் பேச இயலாமல் திகைத்து நின்றது!
என்னை ஆளாக்கின தெய்வங்க, பெத்தவங்க. அவங்களுக்கு செலவு செய்யறதைக் கணக்கு பார்க்கலாங்களா? சொல்லுங்க.
இவ்வளவு கதை பேசுகிறீர்களே? இனிமேல் இப்படி தவறுகள் நடக்காமல் கண்காணிக்க உருப்படியான யோசனைகள் ஏதாகிலும் உண்டா என்கிறீர்கள்தானே?
அதற்கு ஒரு படி மேலே போய், இதைச் சில காலம் செய்து விட்டு, என்ன முன்னேற்றம் என்று மீண்டும் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார்
சீதா கல்யாணம் படம் பார்க்க வருபவர்கள் கையில் வெற்றிலை, பாக்கு, பழம், சூடங்களோடு வருவார்கள் என்றும் குறிப்பிட்டார்
என்னவோ தெரியவில்லை, இவருக்கும் பழைய பாடல்களின் மீது அத்தனை மோகம்.
அது போல வேறு வேறு தன்மைகளைக் கொண்ட நாம் இருவரும் ஒருவரோடு ஒருவராய், ஒருவரில் ஒருவராய் மாறி விட்டோம். சரியா?
ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும், அதை கழுவுவதற்க்கும் குறைவான நீரே தேவைப்படும்
நானும் வந்ததிலிருந்து அங்கும் இங்கும் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது ஒருத்தராவது சிரத்தையோடு சாமியைப் பார்கிறார்களோ! ஊஹூம்! நம்ப கோயில்களில்தான் இப்படி!
தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளி வர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன! நூற்றுக்கணக்கான படங்கள்! ஆயிரக்கணக்கான பாடல்கள்!!

Tuesday, March 24, 2009

"சாரல் 409"

கால்கள் கடுக்கிற வரைக்கும் நடப்போம். காந்திமதி ஸ்கூல் வரைக்கும் நடப்போம். காந்திமதி ஸ்கூல் தான் ஊருக்குக் கிழக்கு எல்லை. "கொக்குக் கொத்தி மீனும் பிழைக்குமோ கோழிக்குஞ்சும் பிறாந்தும் இணங்குமோ நாயும் மொசலும் நடுவழி தங்குமோ"
உறவு என்பது மென்மையானது. அதில் சந்தேகம் வந்து விழுந்தால் எல்லாம் நாசமாகிவிடும்.
உப்பும், சிகப்பு மிளகாயும் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தலைவன் என்பவன் ஒரு பெரிய கூட்டத்திற்கு நம்பிக்கை தருபவனாக இருக்க வேண்டும். அவரைப் பார்த்தாலே அனைவரும் தன்னம்பிக்கை பெற வேண்டும்.
டிசம்பர் 2009-க்குப்பிறகு தாங்கள் இப்பொழுது பார்க்கும் துறையிலேயே இன்னும் நல்ல பதவியில் அமர்வீர்கள்.
எ‎ன்னுடைய நாய் ரொம்ப புத்திசாலி தெரியுமா! காலையில பேப்பர்கார‎ன் பேப்பர் போட்டவுடனே எடுத்துக் கொண்டு வந்து எ‎ன் கையில கொடுக்கும்
கவிபாடும் புலவர்கள் கப்பம் சமர்ப்பித்துப் புவிபுரக்கும் சிற்றரசர் புடைசூழ வாழ்ந்திட
ஐயையோ! வாடிக்கையாளர் பற்றிய தகவல்களையெல்லாம் நாங்கள் வெளியிடக்கூடாதே! ரகசியக் காப்புக் கொள்கை இருக்கிறதே!
ஒரு தாத்தாவும் பாட்டியும் என்னைப் பார்த்துவிட்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். என் கதையைப் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்து பக்கத்தில் போய்க் கேட்டேன்.
சிறிய ஏரி ஒன்றும் இருக்கும். இமயத்தின் செடர் மரங்கள் நிறைந்த காடுகள், எங்கு பார்த்தாலும் மலர்கள், மலர்கள், மலர்கள்!
வன்முறை கொண்ட செய்திகளின் மீது மையம் கொள்ள வேண்டாம் எனப் பத்திரிகைகளுக்கும் வேண்டுதல் விடுப்போம்.
அதில் 2.7லி என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் டிஹைரேஷன், உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும்.
'நீ மிட் ஆன்ல நில்லு, நீ மிட் ஆஃப் ல" என்றவாறு சொல்லி வந்தவன் என்னிடம் வந்தவுடன், நீ 'சில்லி' என்றான். எனக்கு வந்ததே கோபம். "நீ சொல்லித்தானே நான் ஆட வந்தேன். இப்போது நீ என்னை சில்லிங்கறே? நான் வரமாட்டேன்" என்று அடம் பிடித்தேன்
முதல் நாள் முழுப் பாக்கைப் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதை தேவியின் பாதத்தில் வைத்தபின் பூசாரி அதைத் திருப்பித் தருவார். அதனைவீட்டில் வைக்க, நினைத்த காரியம் நடந்து விடுகிறதாம்! நினைத்தது நிறைவேறியவுடன் அந்தக் கொட்டைப் பாக்கை ஆலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின் தேவிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
சத்தியமா சொல்றேன் நான் சினிமால தான் இந்த மாதிரி காதலைப் பார்த்திருக்கிறேனே ஒழிய நிஜ வாழ்க்கையில் அது வரைக்கும் பார்த்ததில்லை.

Wednesday, March 18, 2009

"சாரல் 408"

"அவர் அடிச்சத நீ வேடிக்கை பாத்துட்டு நின்னியாக்கும்? யா அல்லா, சூதுவாது தெரியாத புள்ளய அடிச்சி வெரட்டி வுட்டுட்டீங்களே, எம்புள்ள எங்க போனானோ, என்ன ஆனானோ, ஒனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லித் தேடச் சொல்லேம்மா. அதோட போலீஸ்லயும் எழுதி வையி. நா உசிரோட இருக்கப்பவே எம்புள்ளய இந்தப்பாடு படுத்திறியளே, நா போய்ச் சேந்த பெறகு அவன என்னவெல்லாஞ் செய்வீகளோ, நீதான் ஆண்டவனே எம்புள்ளயக் காப்பாத்தணும்."
காலம் கண் திறந்தால், புதிய திறமைகள் வெளிப்பட்டால் தமிழ்த் திரைப்படங்களிலும் நல்ல கதைகளை நாம் காணக் கூடும்! பொறுத்திருப்போம்; காலம் மாறும்!
 
அம்மா என்றே கீழ்வீழ பொங்கும் கருணைத் தேவியளின் பங்கயத் தாள்கள் கரம் பற்றும்
வடக்கே நல்ல பாடல்களை தந்தது போல நமக்கும் சுவை நிறைந்த கானங்களை அள்ளித் தரட்டும்
தேனடை நிறைவதற்காகக் காத்திருக்கிறான், ஒருவன்; அவன் வருகைக்காகக் காத்திருக்கிறது, அவனது குடும்பம், பசித்த வயிறுகளோடு!
இந்த டூயட் ஆராய்ச்சி இது போன்ற வியாதிகள் பரவுவதைத் தடுக்க உதவி செய்யும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
உண்மையான தலைவர்கள் தோல்வியின் போது பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்வார்கள்.
 
16 வெள்ளிக்கிழமைகள் தோறும் தொடர்ந்து இல்லத்தில், துளசி பாடலைச் சொல்லி திருமகள் படம் முன் தீபமேற்றி வர, திருமணம் ஜுலை மாதத்திற்குள் கை கூடிவிடும்.
"போலீஸ்கார மடையனுங்களா! எங்க சரக்கை புடிச்சதுக்கு பதிலா உங்களைப் பிடிக்க இது எங்க ப்ளான்டா! ஏன்யா சிங்கப்பெருமாளே, யாருயா இந்த ஏட்டு? இவரும் ஏன் இங்க வந்து மாட்டிக்கணும்?" என்றான் நக்கலாய். விஜயன், "ராத்திரியே வீட்டுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னு சொன்னீங்களே பாஸ்!"
மிக்சியில் தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, உப்பு மற்றும் வதக்கிய பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு அரைத்து எடுக்கவும். கடைசியாக கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பைத் தாளித்துச் சேர்க்கவும். புதினா இலைகளையும் விரும்பினால் தாளிக்கையில் சேர்க்கலாம்.
'நான் புனிதமானவன், என்னைத் தொடாதே..' இப்படியே நூறாண்டு காலம் சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம்!"
 
ஆமாம்; 6400 ஏக்கர் நிலம் மைட்டாஸ் வசம் இருக்கிறது என்றோமே, அதை விற்றவர்கள் நிலத்தின் உண்மை சொந்தக்காரர்கள்தானா? பத்திரங்கள் எல்லாம் சரியானதா?
இங்கு நண்பர்கள் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டாலும் சரி, தொலைபேசியில் பேசிக்கிட்டாலும் சரி, 'எப்படி இருக்கீங்க' என்று கேட்பதில்லை. 'உங்க கம்பெனி நிலைமை எப்படி இருக்கு? எவ்ளோ பேருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க?' என்றுதான் பேசிக்கறாங்க
தனுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.
சில சமயம் மனசுல ஒருத்தர் நுழைஞ்சவுடனே மனசு தானா பூட்டிக்கும். உள்ள இருக்கிறவங்களை வெளியவும் விடாது. வேற யாரையும் உள்ளயும் விடாது.

Tuesday, March 10, 2009

"சாரல் 407"

"என்னோட நாய் மட்டும் இல்லன்னா என்னக் கொலையே பண்ணிப் போட்டுட்டுப் போயிருப்பானுங்க சாமி"
 
நல்லவேளை! "எப்படித் துப்பாக்கியால் சுட்டாய், சுட்டுக் காட்டு" என்று சொல்லவில்லை!
நம்ம உடம்புக்குள்ள இருநூறுக்கும் மேல எலும்புகள் இருக்கு.. தெரியுமா? மெதுவாச் சொல்லுங்க டாக்டர். வெளியே எ‎ன்னோட நாய் உட்கார்ந்திருக்கு
 
அவர் இந்துவல்லர்; துறவியல்லர்; பிராமணர் அல்லர்; சூத்திரரிலும் கடைப்பட்டவர்; மேலை நாடுகளுக்குச் சென்றும் தம்மை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்
 
'குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்'
"பேரன் கடுதாசியைப் பார்த்திட்டீல்ல... இனிப் பொழைச்சுக்குவே"
என்னவன் கையாலே என் இறுதிச் சடங்கும் முடியட்டும்!
நமது ஆதங்கம். இந்த நாட்டில், தவறு செய்பவர்கள், தவறைக் கண்டு கொள்ளாமல் விடுபவர்கள், தவறுக்குத் துணை போகிறவர்கள் யாரும் வெட்கப்படுவதில்லை! இறைவா, என் செயக் கருதி இருக்கின்றாய் எம் பாரத நாட்டை?
எப்படி இருந்த ஊர் அது!! சோழ காலத்தில் ராஜேந்திரன் சுமத்ராவை நோக்கிப் படையெடுத்த போது, அவனை வியக்க வைத்த ஊர். கருணாகர பல்லவன் கலிங்கத்தின் மீது படை எடுக்கும் முன்பு வசித்த ஊர்.
உன் வெட்கத்தில் வழிந்த வர்ணம் கொண்டும் நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பச்சை மிளகாய் சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்
என்ன வரிகள், என்ன வரிகள் - அப்பப்பா! டோஷிபா என்றொரு பெண் வந்து ஹலோ சொல்கிறாளாம்
உங்க வீட்டு மகளிருக்கு அவங்களுக்கென ஒரே ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொடுங்கள். பெண்ணாய் இருந்தால் குடும்பத்தினரிடம் புரிய வைத்து, ஒரு மணி நேரம் உங்களுக்காய்ச் செலவிடுங்கள்.
 
நட்சத்திரக் கோலம்
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க? ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்

Tuesday, March 03, 2009

"சாரல் 406"

அவ‎ன் உலக மகா கஞ்சனாமே? ஆமாம்.. 'டீ'ல கொசு விழுந்தாக் கூட, அத எடுத்து, அது கிட்ட 'துப்பு.. துப்பு'‎னு சொல்வா‎ன்னா பாரேன்
சித்தர் மார்க்கம் வழி செல்வது என்பதும் அனைவருக்கும் வாய்க்காது. ஆன்மீகத்தொடர்புகள் மூலமும், அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் வாழ்வில் நிறைவு அடையும் வாய்ப்பு தங்களுக்கு உள்ளது.
இறைவன் அவதரித்தது முக்கியமாக பாவிகளுக்காகவே, புண்ணியவான்களுக்காக மட்டுமே அல்ல
சொல்லுக செல்லில் பயனுடைய சொல்லற்க செல்லில் பயனிலாச் சொல்
நம் சந்தேகம் எல்லாம், கம்பெனி ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு இவர்கள் ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டுமே! அனுப்பவே இல்லையா? இல்லை என்றால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
 
சோதனை யாவும் வென்றிடுவோம் - புது சோபிதம் அன்று வாழ்வுபெறும்.
 
உன்னை மிகவும் பிடிக்கும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் உனக்காகச் செய்ய முடியாது. வேண்டுமானால் நீ இறந்தபின் உன் கர்ம காரியங்களை நான் செய்கிறேன்.
ஒவ்வொரு வர்ணப்பொடிகளிலும் துல்லியமாய்த் தெரிகிறது உன் வெட்கம்..!
ஆஸ்கர் சிலைகள் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1928. வடிவமைத்தவர் எம்ஜிஎம் கலை இயக்குனரான செட்ரிக் கிப்பன்ஸ் என்பவர்.
விலங்கனைய நாடோடியாய் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் தனக்கென்ற ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு குழுவாக வாழ ஆரம்பித்தான்.
பெரிய அளவில் முதல் போட்டு, பல இயந்திரங்களை ஓட்டி, பல நூறு தொழிலாளர்களை நிர்வகித்து... எப்படி? எப்படி? என்று நீங்கள் மலைப்பது தெரிகிறது.
மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்
 
அந்த மெட்டுதான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேஷனோ என்று யோசிக்கக் கூட தோன்றுகிறது! ஆம், இன்ஸ்பிரேஷன்தான், நகல் இல்லை
இந்த நாட்டுல பிறந்து வாழ்ந்துட்டிருக்கிற ஒவ்வொரு உண்மையான மனுஷன் ஒடம்புலயும் மத நல்லிணக்க ரத்தந்தான் ஓடுது பாய் சாமி. நீங்க இந்துப் பாட்ட முணுமுணுக்கறீங்க. சாமிப் படங்கள ரசிக்கிறீங்க. நீங்க ஒரு உண்மையான இந்தியன்.
"இப்பவும் நான் தயார். இந்த மாதிரி நல்ல மனசு உள்ளவங்களுக்கு இவங்க நல்ல குணமே அவங்க வாழ்க்கையிலே ஒரு தண்டனையாக ஆகக் கூடாது.

Tuesday, February 24, 2009

"சாரல் 405"

என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில்? நானும் ஒரு மனுஷிதானே! எத்தனை இழப்புகளைத்தான் தாங்குவது?
தமிழ் முனைப்புடன் எழுந்தது எதனாலே? அது மொழிக்குள தனிக்குணம் அதனாலே
 
மாமா.. உங்க பொண்ணை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவட்டுமா?" "எ‎ன்ன.. திமிரா?" "இல்ல மாமா.. 'தெனாவட்டு'. 'திமிரு' போயி ரொம்ப நாளாச்சு
பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!
தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முகக் கவசம் படித்து வாருங்கள். புத்திர பாக்கியம் உண்டாகும்.
ஆசிரியரின் பாடத்தில் அசோகன் மாணவனின் மனதில்... மரம் வெட்டும் தந்தை
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி... வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
ப்ரணவ் மணமகனுக்கான இடத்தில் கையெழுத்துப் போட்டான். கையிலிருந்த குழந்தையை ப்ரணவ் கைகளில் தந்தாள் ஸ்மிருதி. கையெழுத்துப் போட்டாள்.
புத்தகத்திலும் வரவு இல்லை. பேங்க்கிலும் வரவு இல்லை. எனவே பேங்க் ரிகன்சிலியேஷன் என்ற ஸ்டேட்மெண்டில் இந்தத் தொகை வரவே வராது.
உயிரற்ற சிலை போல் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கண்டதை உண்மை என்று நம்ப அவளால் இப்போதும் முடியவில்லை....
உங்களுக்குப் புரியாது பெரியப்பாமாமா.. சில பேரை ரொம்பவும் சேர்த்துக்கக் கூடாது. வைக்க வேண்டிய இடத்துல வச்சிரணும். இல்லே.. நமக்குத்தான் பிரச்சனை...! இப்ப..நான் என்ன பழைய விஜியா.. ஒருத்தரோட மனைவி இல்லியா..?
கணினிப் புரட்சிக்குச் சற்று முன்னால் கூட இந்தியாவை ஒரு பாம்பாட்டிகள் தேசம் என்றுதான் மேலை நாடுகளில் கருதி இருந்தார்கள்.
"அவருடைய பெயரில் வைரமும் முத்தும்தான் இருக்கின்றன. ஆனால், அவர் ஒரு நவரத்தினம்" என்று கூறினார்.
காதை அடைக்காத இசை, நல்ல மெலடிகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என்று ஒரு ஃபார்முலாவுக்கு வந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்! "இதற்கு முன்பு கேட்டது போலவே இருக்கின்றது" என்ற உணர்வை மட்டும் நீக்க மனிதர் பாடுபட்டால், எங்கேயோ போய்விடுவார்.

Wednesday, February 18, 2009

"சாரல் 404"

காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான். திருமணம்தான் கண்களைத் திறக்கிறது
குழந்தையின் 'அப்பன்' நான் என்று சொல்லாமல் ஆதரவாளன் நான் என்றானே! அந்த மட்டில் நிம்மதி
அலைமோதும் என் ஆசைகளை அப்படியே சொல்லிவிட, தொலைபேசியில் அழைக்கிறேன், தொலைவில் வாழும் உன்னை!
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, தாய்மாமனைக் கொல்லும் என்று புலம்பும் அறிவிலிகளே! அவன், கண்ணன் போல் கீதை சொல்வான் என்று மகிழ மாட்டீரா?
"சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாசம்
வாழ்க்கையில ஒங்கம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க, ஒங்கம்மாவுக்காக நா ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடலை
எதையும் வெளிநாட்டார் ஏற்றுக்கொண்டால்தான் தாமும் ஏற்றுக்கொள்ளும் இந்தியரும் விவேகானந்தரை ஏற்றுக்கொண்டனர்
அறிவு இருக்கிற இடத்துல ஆங்காரம் கண்டிப்பா இருக்கும்டா. அதை விடு. ஆர்த்தியோட பிறந்த நாள் வீடியோவைப் பார்த்தாயா
இரண்டாவது முறையாக, அவருக்கு இருபது வயதானபோது அவரின் உடல் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இப்படி மூன்று முறையாக செத்துப் பிழைத்திருக்கிறார் மூட்டாட்டா! அடாடா
போர்டு மெம்பர்கள் ஒன்று பட்டு நின்று உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்க ஆதரவு பெற்றுத் தர, டி.ஆர்.பிரசாத் தகுதியானவர் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பெரிசா ஒண்ணும் செய்ய வேணாம். அவங்களை அறுபது கி.‏மீ ஓடச் சொல்லுங்க.. போதும்
என்று அவர் சபையினை விளித்ததுதான் தாமதம், அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பேரும் எழுந்து நின்று கைகளைக் கொட்டி முழக்கினார்கள். அமைதி திரும்ப இரண்டு நிமிஷம் பிடித்தது
தேவைப்படும்போதெல்லாம் அப்பு காட்டாமணக்கு வேலியின் இடையில் மண்ணில் பள்ளம் பறித்து, அதன் வழியாக வெளியில் ஓடிவிடும்.
ராமனைப் பிரிந்து சீதை காட்டில் வால்மீகி ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இடம்தான் இன்றைய கோயம்பேடு. காட்டில் உள்ள கொடிய மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்திட ஆஸ்ரமத்தைச் சுற்றி இரும்பாலான வேலி அமைத்திருந்தார்களாம்

Tuesday, February 10, 2009

"சாரல் 403"

தெரியாத நாடு. கையில் அளவான பணம். வந்த காரியம் நிறைவேறுமா என்ற நிச்சயமும் இல்லை.
போக்குவழி ஞானவழி புனிதவழி காட்டுதற்குப் போதிமரத் தோப்புகளோ கோடி - எனில் புத்தனைத்தான் காணவிலை தேடி
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைதிருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. அங்கும் ஒரு புதுமை!
காமடிக்கு தனி டிராக் எடுத்து இணைத்து ஓட்டினால்தான் படம் ஓடும் என்ற அளவு தமிழ் படங்களில் முக்கிய இடத்தை காமடி, பேசும் படம் தோன்றிய காலம் தொட்டு பிடித்து விட்டது
அழகான குழந்தை.. சிவப்பு நிறம்.. சின்னஞ் சிறிய பூப்பொட்டலம்.. புஷ்பக் குவியல்
சாந்தா வாசலுக்கும் சமையல் கட்டுக்குமாக குட்டி போட்ட பூனைபோல் சுற்றி சுற்றி வந்தாள். வாசலுக்கு வருவாள்; கண்களை இடுக்கி தெருக் கோடி வரை பார்ப்பாள்; 'ஹூம், இன்னும் காணும்'
தூங்கும்போது அவன் முகம் இன்னும் விகாரமாய்த் தெரிந்தது. இடுப்பு நழுவிய வேட்டி, கன்னத்தில் கோடு போட்ட உமிழ்நீர்.. பாதி திறந்த கண்கள்.. புஸ்..புஸ்ஸென்ற மூச்சு..
என் குரலை மட்டும் கவனமாய் கேளுங்க ஆர்த்தி....நீங்க இப்ப ரிலாக்ஸ் ஆயிட்டு இருக்கீங்க. உங்களோட உடல் ரிலாக்ஸ் ஆகறதை உங்களால் உணர முடியுது....உங்க மனசும் அப்படியே அமைதியடையறதையும் உங்களால் உணர முடியுது....ஆமா, கொஞ்சம் கொஞ்சமா உங்க டென்ஷன், மன இறுக்கம் குறைஞ்சுட்டே போகுது....
பாதிக் கவிதைக்கு இவ்வளவு பலம் இருக்குமா? கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய ஒரு பணிக்கு, இந்தப் பாதி கவிதையே விதையாகுமெனில் அவருடைய அத்தனை கவிதைகளும் எத்தனை வலிமை தரும்! 'கனவு காணுங்கள்'
நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்புடன், நகரின் போக்குவரத்து அமைப்பின் திறன் எதையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது; அந்த அளவுக்கு நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்பு சிறந்து விளங்குகிறது எனலாம்.
வேணாம் அதைக் கிளறினா வேதனைதான். பகவானே, எத்தனை வருஷமாயிடுத்து! இப்ப எங்கேயிருப்பா? எப்படியிருப்பா?
உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. மாமியாரை தள்ளி விடும் போது கொஞ்சமாவது யோசிச்சியா? அங்க யாராவது இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்
 
படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் உறக்கம் வராவிட்டால் படுக்கையை விட்டு எழுந்திருந்து தூக்கம் வரும் வரையில் ஏதாவது ஒன்றைச் செய்யவும்.
குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தங்களின் முயற்சி வெற்றி பெற தங்களின் குலதெய்வத்தை முறையாக வழிபடுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் திருமகளையும் ஆராதித்து வாருங்கள்.
உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்; உதிப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்; உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!

Tuesday, February 03, 2009

"சாரல் 402"

உடல் குளிரால் பாதிக்கப்படும்போது இத்தசைகள் சுருங்கி முடிகள் விரைத்து நிற்கும். இதனால் வெதுவெதுப்பான காற்று அவற்றுள் சிக்கி உடல் வெதுவெதுப்பாகிறது.
''உன் குழந்தையை மட்டும் எடுத்துச் செல்லும் அளவிற்கு நான் கல்மனதுக்காரி இல்லை. என்னோடு நீயும் வா! அந்த வீட்டில் எனக்கென்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையுடன் உன்னை வாழ வைக்கிறேன்'' என்று கூறி அழைத்தேன்.
வாங்க ராஜன். உங்களுக்காக இல்லாவிட்டாலும், என் கணவருக்காக, அவரோட அன்பு மனசுக்காக, எல்லோரையும் நேசிக்கிற தன்மைக்காக, யாரோடயும் தப்பு கண்டுபிடிக்கத் தெரியாத குழந்தை போல இருக்காரே... அதுக்கு மதிப்பு தரவாவது வாங்களேன்.."
டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள்.
வாலிபம் நைந்துடல் விந்தைசெலும்----உயிர் வண்டிந்தப் பூவினை விட்டகலும்
முடிவெடுக்கும் முன் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நலம். தங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எல்லாம் மெலடிகளாக இருக்க வேண்டும். காதை அடைக்கும் வாத்தியங்கள் ஏதும் இருக்கக் கூடாது. பாடல்களைக் கேட்டால் யாரோ தாலாட்டுவது போலவே இருக்க வேண்டும்
மருந்து எடுத்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தால் சபரிமலைக்குப் போகும் பக்தர்கள் போல் கொஞ்சம் உறுதியான நியமங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்
பதவியே இல்லாத ஒருவருக்கு மக்கள் கூட்டம் கூட சாத்தியமா? பணபலம் இல்லாமல் தொண்டர் படை அமையுமா? சாதி மத பலம் இல்லாமல் கூட்டம் சேர்க்க முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா என்றால், நடந்திருக்கிறது.
சட்டையில் மறந்த பொத்தானிட்டு சகலமும் நான் உனக்கென்று சளைக்கச் சொல்லுகிறாய்
வண்ணக் கோலம்
இந்த சந்தர்ப்பத்தில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் வர்த்தகங்கள் நடந்து கொண்டிருந்தன. (நேர வித்தியாசம்) இந்தச் செய்தி தெரிந்ததுதான் தாமதம்.
வீடு கட்ட கடன் வாங்கின நபர் அதிகாரியை இன்ஸ்பெக்ஷனுக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தைப் பார்த்த அதிகாரி திகைத்துப் போனார்.
போன வருஷம் தமிழ்ல மட்டும் 108 படங்கள் வந்துச்சு. அதுல சுமாராக 70% படங்கள் தியேட்டர்ல ஓடினதை விட, தியேட்டரை விட்டு தலைதெறிக்க ஓடின தூரம்தா‎ன் அதிகம்.
நேரம் செல்லச் செல்ல அவனுக்கும் லேசாக அவளுடன் செய்யும் பயணம் ஒருவித ஆனந்தத்தைத் தர ஆரம்பிக்க அவன் எரிச்சலடைந்தான். இவளுக்கு எதாவது வசிய வித்தை தெரியுமோ? கஷ்டப்பட்டு ஆபிசில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். ஆனால் இடை இடையிடையே மனம் முரண்டு பிடித்தது.
மனிதர் ஓரிண்டு படத்தில் நடித்திருந்தால் பரவாயில்லை, ஒராயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்! ஆனால், இதனால் அவர் வெறும் நகைச்சுவை நடிகராகிவிட முடியுமா!
தேசிய அளவில் நாம் நம் தனித்தன்மையை இழந்து விட்டோம். இழந்து போன இந்தத் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். பாமரர்கள் நிலையை உயர்த்தியே ஆக வேண்டும்.

Monday, January 26, 2009

"சாரல் 401"

வெப்பம் மிகுதியாக உள்ளபோது கைகளையும் கால்களையும் நீட்டி அகலப்படுத்துவதால் வெப்பம் வெளியேற வாய்ப்புண்டாகிறது
அப்பப்ப கொடுத்தா ..செலவழிச்சுரத் தோணும். தரலேன்னா.. இருக்கறதுல போட்டடிச்சு ஏதோ பண்ணிக்குவாங்க..இப்ப இந்த பணம் சேர்ந்திருக்காது
சொல்ல வந்ததைச் சொல்லாமல் எச்சிலோடு என்னுள் விழுங்கும் போதெல்லாம் என்னை விட அதிக பாரத்தைத் தாங்குகிறது என்னிதயம்...
லுங்-கோம் வீரர்கள் ஓடுவதில்லை. கிட்டத்தட்ட காற்றில் பறப்பது போல பறந்து கீழே காலை வைக்கும் நேரத்தில் மீண்டும் பந்துபோல பவுன்ஸ் ஆகி பறந்து மீண்டும் தரையில் காலை வைத்து உந்திக் கொண்டு ஒரு பெண்டுலம் போன்ற ரிதத்தில், ரப்பர் பந்தின் எலாஸ்டிக் தன்மையுடன்
இந்தியாவிலேயே நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தகுதி, உலகெங்கிலும் 55 நாடுகளில் அலுவலகங்கள், 53000 பணியாளர்கள், நியூயார்க் பங்குச் சந்தையில் பதிவு, 600 வாடிக்கையாளர்கள். அதுவும் அவர்களெல்லாம் சாதாரணமானவர்களா? மைக்ரோசா•ப்ட், ஜெனரல் எலெக்ட்ரிக்கல்ஸ், நிஸ்ஸான்
கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா? அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்?!
லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறை, எப்ஃ.பி.ஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி.
மரங்கள் முற்றும் இலையுதிர்ந்து மண்ணின் மீது நிலைத்தன அரவணைக்கு மனமதியாலே ஆக்கந்தேய்ந் தழிந்தது
 
துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
தங்கள் ராசியிலிருந்து குரு 11-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், உங்கள் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். முழு பலன் கிடைக்கும்.
சரவணன் சென்று பரிமளத்தின் அருகில் அமர்ந்தான். அரவம் கேட்டு பரிமளம் சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தாள். அவளிடமிருந்து லேசான புன்முறுவல் வெளிப்பட்டது.
எங்கம்மா உன் கிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா என் கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் என்னான்னா எதை வேண்டாம்னு சொல்றாங்களோ அதைச் செய்யறது தான்...
உன் ஹேண்ட் பேக்கை அந்தப் பாவிக பிடுங்கிட்டானுங்க. கழுத்தை அறுத்து செயினை எடுத்திருக்கானுங்க.
நன்கு ஆறியபின் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைக்கவும்
நம்முடைய பூமியில் 12,00,000 வகை விலங்குகளும் 3,00,000 வகை செடி கொடிகளும் 1,00,000 வகையான மற்ற ஜீவராசிகளும் உள்ளன.